ஆரணி அருகே தவிட்டு மில்லில் பாய்லர் வெடித்து கணவர், மனைவி காயம்.
ஆரணி அருகே மொழுகம்பூண்டி ஊராட்சி சேர்ந்த மோட்டூர் கிராமத்தில் உள்ள தவிட்டு மில்லில் பாய்லர் வெடித்து இங்கு பணிபுரிந்த கணவன், மனைவி காயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்;
ஆரணி அருகே மொழுகம்பூண்டி ஊராட்சி சேர்ந்த மோட்டூர் கிராமத்தில் உள்ள தவிட்டு மில்லில் பாய்லர் வெடித்து இங்கு பணிபுரிந்த கணவன், மனைவி காயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி ஊராட்சி சேர்ந்த மோட்டூர் கிராமத்தில் விநாயகா ரைஸ் மில்லில் தவிடு மில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தவிட்டு மில்லில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென பாய்லர் வெடித்து தீ பரவியது. இதில் இங்கு பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை அகதியைச் சேர்ந்த தீக்ஷன் ( 40 ) , இவரது மனைவி தக்ஷினி ஆகியோர் தீக்காயம் அடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்த ஆரணி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று தீயை அணைத்தனர். மேலும் ஆரணி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.