டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அதிரடியாக களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்!!

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு இல்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, உத்தரவு.

Update: 2024-10-03 16:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், சிலுவம்பட்டி ஊராட்சி, பொரசபாளையம் கிராமத்தில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டெங்கு ஒழிப்புப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் தண்ணீர் தேங்கும் பகுதிகள் வீடுகளில் சேமிக்கப்படும் தண்ணீர் மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டவரும் தூய்மை பணிகள் குறித்து கேட்டறிந்தார் மேலும் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து மற்றும் கிருமி நாசினி தெளிக்கவும், நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு இல்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். வீடுகளில் ஆய்வு பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வீடுகளை சுற்றியுள்ளபகுதிகளில் மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் சிரட்டை, அம்மிக்கல்,தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் போன்றவை இருப்பின் அவற்றில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்கள்பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

Similar News