காவிரி குடிநீர் தொட்டியா கழிவுகள் சேகரிக்கும் தொட்டியா

காவிரி குடிநீர் தொட்டியா கழிவுகள் சேகரிக்கும் தொட்டியா

Update: 2024-10-03 18:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கொட்டாம்பட்டியில் காவிரி கூட்டுக் குடிநீர் தொட்டியினுள் ரோட்டோர ஆக்கிரமிப்பாளர்கள் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரமற்ற தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.திருச்சி, குளித்தலையில் இருந்து ஆழ்குழாய் அமைக்கப்பட்டு மேலுார் தாலுகாவுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதில் கொட்டாம்பட்டி பகுதிக்கு குருவார்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து சப்ளையாகிறது. இக் குடிநீரை கொட்டாம்பட்டி, குமுட்ராம்பட்டி உள்பட பல கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். காவிரி குடிநீர் குழாய்களில் ஏற்படும் பழுதை நீக்க ஏதுவாக, பஸ் ஸ்டாண்ட், பழைய, புதிய போலீஸ் ஸ்டேஷன்கள், காரைக்குடி - திண்டுக்கல் நெடுஞ்சாலை அருகே தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இதன் அருகே கடை நடத்துவோர் கழிவுகளை தொட்டிக்குள் கொட்டுகின்றனர்.சமூக ஆர்வலர் சரவணன் கூறியதாவது: தொட்டியின் மேல் பகுதியை கழற்றியதால் தண்ணீர் வீணாகி வருகிறது. ரோட்டை ஆக்கிரமித்து கடை நடத்துவோர் கழிவுகளை தொட்டியினுள் போடுவதால் அவை அழுகி குடிநீர மாசுபடுகிறது. இதனை பயன்படுத்துவோர் நோய் தொற்று ஆளாகும் நிலை உள்ளது. கழிவுகளை ரோட்டருகே கொட்டி தீவைப்பதால் கிளம்பும் புகையால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், உடனடியாக தொட்டியை சுத்தம் செய்து முள் வேலி போடப்படும். மீறி கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar News