மாணவர்கள் தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் திடீர் ஆய்வு

மாணவர்கள் தங்கும் விடுதிகளில் காவல்துறையினர் திடீர் ஆய்வு

Update: 2024-11-25 01:28 GMT
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடுஅரசு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்பள்ளி கல்லூரிகள் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளதா என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு ஈரோடு ரோட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவன வளாகத்திற்கு அருகிலும் எதிரிலும் உள்ள 20 க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ளனர். தங்கும் விடுதிகளில் போதை பொருள்கள் புழக்கம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்த முடிவெடுத்த ஊரக காவல்துறையினர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் தீபா மற்றும் எலச்சிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார், ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார்,பள்ளிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மலர்விழி ஆகியோர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டபோலீஸ் படையுடன் காலை 6 மணிக்கு திடீரென அனைத்து விடுதிகளிலும் ஒரே நேரத்தில் ஆய்வு செய்தனர்.தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களை தட்டி எழுப்பி அறைகளை சோதனை இட்டனர்.அனைத்து அறைகளிலும் சோதனை செய்த நிலையிலும் போதை பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.இதேபோல் அருகில் உள்ள பேக்கரிகள் டீக்கடைகளில் போதை புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா வேறு ஏதேனும் போதைப் பொருள்கள் விற்கப்படுகிறதா பீடி சிகரெட் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் கடை கடையாக உள்ளே சென்று ஆய்வு செய்து பார்த்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அந்த கடைகளில் ஆய்வு செய்தபோது அங்கும் எந்த போதைப்பொருளோ புகையிலை பொருளோ கிடைக்கவில்லை.போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க இது போன்ற நடவடிக்கைகள் இங்கு மட்டுமல்லாது அனைத்து பள்ளி கல்லூரி வளாகங்கள் அருகிலும் தொடர்ந்து நடக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

Similar News