வெள்ளகோவில் கஞ்சா வைத்திருந்த பீகார் வாலிபர் கைது

வெள்ளகோவில் பகுதியில் கஞ்சா வைத்திருந்த பீகார் மாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2024-11-25 02:37 GMT
வெள்ளகோவில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமுத்து காங்கேயம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள பழைய பஸ் நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். விசாரணையில் அவர் வெள்ளகோவில் ஒரு டீக்கடையில் வேலை செய்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் ராம் (வயது 30) என்பதும் அவரிடம் 50 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. காவல்துறையினர் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News