நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்!

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 110 கிலோ வெண்ணெய்யைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

Update: 2024-11-24 14:57 GMT
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு விசேஷ நாள்களில் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம், வெள்ளி கவசம், முத்தங்கி அலங்காரம், புஷ்ப அலங்காரம், வடை மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். காா்த்திகை, மாா்கழி, தை மாதங்களில் இரவு 7 மணிக்கு மேல் கோயில் நிர்வாகத்தால் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.மாலை சுமார் 5 மணிக்கு துவங்கிய அலங்காரம் இரவு 7.30 மணிக்கு நிறைவு பெற்றது. சுமார் 110 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் பட்டாச்சாரியார்கள் அலங்காரம் செய்தனர். பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளியூரில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிப்பட்டனர்.

Similar News