5 மணி நேர மின் நிறுத்தம் பொதுமக்கள் அவதி
குமாரபாளையத்தில் தொடர் மின் நிறுத்தம் செய்து வருவதால் பொதுமக்கள் அவதிகுள்ளாகி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று மாலை 03:00 மணி முதல் இரவு 08:00 மணிவரை, 5 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் விசைத்தறி, கைத்தறி, ஸ்பின்னிங், டபுளிங், உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், பாதிப்புக்குள்ளானது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அவதிக்கு ஆளாகினர். பால் விற்கும் கடைகளில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் பால் பாக்கெட்டுக்கள், மின்சாரம் இல்லாததால், பால் கெடும் நிலை ஏற்படுமோ? என அச்சத்துடன் இருந்தனர். இதனால் குமாரபாளையத்தில் உள்ள பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாக மின்வாரியத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பவர் ஹவுஸ் மின்மாற்றியில் பழுது எற்பட்டதால் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்கள்.