மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்

குமாரபாளையத்தில் மனைவி மாயமானதாக கணவன் போலீசில் புகார் செய்துள்ளார்.

Update: 2024-11-24 14:48 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் வசிப்பவர் மணிகண்டன், 37. டெம்போ ஓட்டுனர்.  இவரது மனைவி சபீனா, 26. சபீனா, தன் கணவன் பலமுறை சொல்லியும் கேட்காமல், பிற நபர்களுடன் போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் மாலை 02:00 மணியளவில் வேறு ஒயரு நபருடன் இன்ஸ்டாகிராமில் பேசி வந்ததை கண்டுபிடித்து, கண்டித்துள்ளார். இதையடுத்து மணிகண்டன் வேலைக்கு வந்துவிட, சபீனா வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக, மணிகண்டன் தந்தை கூற, பல இடங்களில் தேடியும் சபீனா கிடைக்கவில்லை. இது குறித்து மணிகண்டன் , தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் சபீனாவை தேடி வருகின்றனர்.

Similar News