ராஜபுரம்: சிக்னல்களை வெளிப்படுத்தாமல் நிறுத்திய கார். டூ வீலர் மோதி விபத்து.
ராஜபுரம்: சிக்னல்களை வெளிப்படுத்தாமல் நிறுத்திய கார். டூ வீலர் மோதி விபத்து.
ராஜபுரம்: சிக்னல்களை வெளிப்படுத்தாமல் நிறுத்திய கார். டூ வீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, தொக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் வயது 39. இவர் அக்டோபர் 3-ம் தேதி மாலை 6:45 மணி அளவில், கரூர் - சின்னதாராபுரம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் ராஜபுரம் பகுதியில் உள்ள சிவ செல்வி மகால் அருகே சென்ற போது, அப்பகுதியில் அரவக்குறிச்சி தாலுக்கா, கூடலூர் கிழக்கு, கொங்கு நகர் பகுதியைச் சேர்ந்த கார்மேகம் வயது 52 என்பவர், அவரது காரை எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் அப்பகுதியில் நிறுத்தி இருந்தார். இதனை கவனிக்காமல் சென்ற ஜெயராஜ் உடைய டூவீலர், காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெயராஜ் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை எவ்வித சிக்னாலும் வெளிப்படுத்தாமல் நிறுத்தி, விபத்து ஏற்பட காரணமான கார்மேகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.