ஜெயங்கொண்டத்திற்கு அரிய பல மக்கள் நலத்திட்டங்களை செய்த அரசு தமிழக அரசு உத்திரக்குடியில் நடைபெற்ற திராவிட மாடல் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ.பேச்சு

ஜெயங்கொண்டத்திற்கு அரிய பல மக்கள் நலத்திட்டங்களை செய்த அரசு தமிழக அரசு உத்திரக்குடியில் நடைபெற்ற திராவிட மாடல் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஜெயங்கொண்டம் கண்ணன் எம்எல்ஏ பேசினார்.;

Update: 2024-12-21 19:35 GMT
அரியலூர், டிச.22 - தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் கலைஞர் உரிமைத் தொகையை வழங்கிய அரசு திமுக அரசு 2026 -இல்  234 தொகுதியும் வெல்வது லட்சியம் மீதமுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் நிச்சயம், மக்களுக்கான ஆட்சி திமுக ஆட்சி என உத்திரக்குடி கிராமத்தில் நடைபெற்ற திராவிட மாடல் சாதனை விளக்க பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ பேசினார் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக சார்பில் உத்திரக்குடி கிராமத்தில் திமுக இளைஞரணி செயலாளரும தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சார பொதுக் கூட்டம்  ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் தனசேகர்  தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கிளை செயலாளர் கருணாநிதி வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர் ராஜரத்தினம், தலைமை கழக இளம் பேச்சாளர் சிவசக்தி, ,தலைமை கழக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர்  கலாசுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு திமுக சாதனைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் பேசும்போது :- ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளிடம் மீண்டும் நிலத்தை ஒப்படைத்த அரசு தற்போதைய தமிழக அரசு. கங்கைகொண்ட சோழபுரத்தில் 22 கோடியில் அருங்காட்சியகம், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை 6 மாடி கட்டிடம், அரசு கலைக் கல்லூரிக்கு இடம் மற்றும் புதிய கட்டிடம், மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் சாலைகள், புதிய பாலங்கள், ஜெயங்கொண்டம் நூலகத்திற்கு இந்திரா நகரில் புதிய கட்டிடம், புதியஅங்கன்வாடி கட்டிடங்கள், ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பகுதி நேர ரேஷன் கடைகள் முழு நேர கடையாகவும்,, ரேஷன் கடைகள் இல்லாத இடத்தில் பகுதி நேர ரேஷன் கடைகள் என ஏராளமான திட்டங்களை கொடுத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும்  அதற்கு உறுதுணையாக இருந்த  போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோருக்கும் எமது தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், ஜெயங்கொண்டம் நகரில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஆயிரம் கோடி செலவில் சிப்காட் (காலனி தொழிற்சாலை)  தொழிற்சாலையில் 80 சதவீதம் பெண்களுக்கும், 20% ஆண்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மழையையும் பொருள்படுத்தாமல் சிப்காட் தொழிற்சாலை அடிக்கல் நாட்ட ஜெயங்கொண்டம் நகருக்கு வருகை தருவேன் என்று கூறி வந்து சிப்காட் தொழிற்சாலையை அடிக்கல் நாட்டி சென்ற தமிழக முதல்வருக்கு எமது தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் கலைஞர் உரிமைத் தொகையை வழங்கிய அரசு திமுக அரசு 2026 -இல் 234 தொகுதியும் வெல்வது லட்சியம் மீதமுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் நிச்சயம், மக்களுக்கான ஆட்சி திமுக ஆட்சி என உத்திரக்குடி கிராமத்தில் நடைபெற்ற திராவிட மாடல் சாதனை விளக்க பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பாலு, பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் கொண்டியார் (எ)செல்வராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் பூ.ரெ.கண்ணன், திருச்சி மண்டல தொமுச தலைவர் சேகர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை  பொறுப்பாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Similar News