கரூர் வழியாக பயணிகளின் தேவை அறிந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்- சேலம் கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா அறிவிப்பு.
கரூர் வழியாக பயணிகளின் தேவை அறிந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்- சேலம் கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா அறிவிப்பு.
கரூர் வழியாக பயணிகளின் தேவை அறிந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்- சேலம் கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா அறிவிப்பு. சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்து, ரயில் எண்.06178 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் 09.10.24 அன்று இரவு 7.00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் 10-10-24 அன்று காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் எனவும், ரயில் எண்.06179 நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து 10.10.24 அன்று இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 11-10-24 அன்று காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அறிவிப்பு செய்யப்பட்ட இந்த இரண்டு ரயில்களும் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ரயில் நிலைங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.