பாலியல் தொல்லை புகார். உதவி ஜெயிலர் சஸ்பென்ட்
மதுரையில் நேற்று பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி ஜெயிலர் மீது புகார் அளிக்கப்பட்டதால் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்
மதுரை மத்திய சிறைச்சாலை உள்ள அரசரடி பகுதியில் நேற்று (டிச.21) முன்னாள் சிறைவாசியின் மகளுக்கும், பேத்திக்கும் உதவி ஜெயிலர் பால் குருசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. மேலும் உதவி ஜெயிலர் பாலகுருசாமியை சம்பந்தபட்ட பெண் தாக்கும் செருப்பால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் உதவி ஜெயிலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பென்ட் செய்யப்பட்டார்.