கரூர் மாவட்டத்தில் 142 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 142 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 142 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5:30 மணி அளவில், காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 10.30 மணி அளவில் கரூர் மாவட்டத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்தது. இந்த மழையின் நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் அதிகபட்சமாக 47.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தோகைமலையில் 11.00 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 24.00 மில்லி மீட்டர், மாயனூரில் 27.00 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 25.40 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 4.00 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 3.00 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மொத்தம் 142.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 11.83 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.