முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக முத்திரை பதித்த முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா
ஆண்டிமடத்தில் முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக முத்திரை பதித்த முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
அரியலூர், டிச.22- வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் தொன் போஸ்கோ முன்னாள் மாணவர் இயக்கம் சார்பாக முத்திரை பதித்த முன்னாள் மாணவர்கள் விருது வழங்கும் விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சி சலேசிய மாநில தலைவர் அருள் தந்தை அகிலன் தலைமை வகித்தார். இப்பள்ளியில் பயின்ற 40 முன்னாள் மாணவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. பல மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு துறையில் பணியாற்றுகின்றவர்கள் என பல துறை வல்லுநர்கள் அடங்கிய அனைவருக்கும் விருது வழங்கப்பட்டன. இவ்விழாவில் மருத்துவர் அன்பு செழியன் மருத்துவர் பழனிசாமி, மருத்துவர் ரவி, மற்றும் அசோக் லேலண்ட் துணைத் தலைவர் சத்தியசீலன், இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்டு விருது பெற்றவர்கள் தங்களுடைய பள்ளி நாட்களையும், தாங்கள் பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். அன்றைய காலகட்டத்தில் தங்களை உயர்த்திய பள்ளியையும், ஆசிரியர்களையும் நன்றியோடு எண்ணிப் பார்த்து நன்றி தெரிவித்தனர். 40 மாணவர்களின் பள்ளி நினைவுகளை முத்திரை பதித்த முன்னாள் மாணவர்கள் என்ற நூலாக தொகுத்தார்கள். அதனை திருச்சி சலேசிய மாநில தந்தை அகிலன் வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வரவேற்றார். நிகழ்ச்சிகளை பள்ளியின் தாளாளர் அருட்தந்தை தாமஸ் லூயிஸ் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கு செயற்குழு உறுப்பினர் ஹென்றி நன்றியுரை கூறினார்