தஞ்சாவூர் அருகே 1, 040 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

கிரைம்

Update: 2024-12-22 12:07 GMT
தஞ்சாவூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் நித்யா மேற்பார்வையில் ஆய்வாளர் முருகானந்தம், உதவி ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் சனிக்கிழமை கண்டியூர்- திருவையாறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் சென்றவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், அவர் திருவையாறை அடுத்த நடுக்காவிரியைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பதும், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கோழிப்பண்ணை, கால்நடைகளுக்குத் தீவனத்துக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. தொடர்ந்து, ரேஷன் அரிசி, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவினர், அவர் அளித்த தகவலின்பேரில் நடுக்கடை வடக்குத் தெருவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,040 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Similar News