வானூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
வானூா் வட்டம், ஆரோவில் பகுதியைச் சோ்ந்தவா் சி.சங்கராபரணம் (56). இவா், கடந்த நவ.23-ஆம் தேதி, அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டாா்.இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரையின்படி, ஆட்சியா் சி.பழனி தடுப்புக் காவலில் சங்கராபரணத்தை கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து,போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.