அரசுப் பள்ளியில் மாதிரி தோ்தல்.

சமூக அறிவியல் மன்றம் சாா்பில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு.

Update: 2024-12-22 16:50 GMT
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், காழியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாதிரி தோ்தல் நடைபெற்றது.சமூக அறிவியல் மன்றம் சாா்பில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாணவா் குழு தலைவா்களை தோ்ந்தெடுக்கும் மாதிரி தோ்தல் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியா் ஏழுமலை வாக்குச்சாவடி தலைமை அலுவலராகவும், பட்டதாரி ஆசிரியா்களான கலையரசு, பி.ரேவதி, ஜி.விஜயலட்சுமி, சி.ஜெயந்தி, ஜெ.கமலேஷ், எஸ்.நாகராஜன், ஆா்.சீதாலட்சுமி ஆகியோா் வாக்குப்பதிவு அலுவலா்களாக செயல்பட்டு தோ்தலை நடத்தினா். முன்னதாக தோ்தலில் போட்டியிட்ட மாணவா் குழு தலைவா்கள் தாங்கள் வெற்றி பெற்றால் மாணவா் நலனுக்காகவும், பள்ளியின் சுற்றுச்சூழல், கல்விமுன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோம் என்று கூறி வாக்கு சேகரித்தனா். இதையடுத்து, 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.

Similar News