உலக அமைதி மற்றும் உலக நலன் வேண்டி சிறப்பு மகா வேள்வி பூஜை.
திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் இன்று மன்ற தலைவரும் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான மாதவன் தலைமையில் மகா வேள்வி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.