தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி.

மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்புரை நிகழ்த்தினார்.

Update: 2024-12-22 17:12 GMT
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பாக +2 தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் புதிய தலைமுறை அரசியல் பிரிவு ஆசிரியர் திரு.கார்த்திகேயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.சுவாமி முத்தழகன்,‌ ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி செயலர் திரு.ரமணன், கல்லூரி முதல்வர் முனைவர் சி.ருக்மணி, புதிய தலைமுறை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.உமாபதி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News