சட்ட மேதை அம்பேத்கரை பாராளுமன்றத்தில் இழிவு படுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும், நாட்டு மக்களிடம் அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷாவை உடனடியாக பதிவு விலக வலியுறுத்தியும், நாகை அபிராமி அம்மன் திடலில் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஓ.எஸ்.இப்ராஹிம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் சுலைமான் தொகுத்து வழங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கல்லார் சம்சுதீன் வரவேற்றார். மாநில பிரதிநிதி ஏ.எம்.ஜபருல்லா, மாவட்ட தலைவர் ஓ.எஸ்.இப்ராஹிம் ஆகியோர் கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில மாவட்ட நிர்வாகிகள், நகர ஒன்றிய, கிளை அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.