நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் தொண்டர்களுக்கு 2025ம் ஆண்டுக்கான காலண்டரை வழங்கினார்!
காலண்டர் பச்சை நிற பின்னணியில் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஜெயலலிதா, எம்ஜிஆர், முன்னாள் அமைச்சர் தங்கமணி படங்கள் உள்ளது.
நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நகர கழக செயலாளருமான கே.பி.பி.பாஸ்கர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 2025ம் ஆண்டுக்கான காலண்டரை சேலம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து அனைவருக்கும் விநியோகம் செய்தார். விரைவில் 2025ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் அதிமுக சார்பில் பச்சை நிற பின்னணியில் முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி,ஜெயலலிதா, எம்ஜிஆர், முன்னாள் அமைச்சர் தங்கமணி படங்களுடன் 2025ம் ஆண்டுக்கான புதிய காலண்டர் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.