தூத்தூரில் அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்க கூட்டம்

கன்னியாகுமரி

Update: 2024-12-22 10:11 GMT
குமரி மாவட்டம், தூத்தூர் வட்டார அணு கனிம சுரங்கம் எதிர்ப்பு மக்கள் இயக்க செயற்குழு கூட்டம் தூத்தூரில் நடைபெற்றது. வட்டாரம் முதன்மை குரு சில்வஸ்டர் குருசு தலைமை வகித்தார். அருட்பணியாளர்  சுரேஷ் செயற்குழு உறுப்பினர்கள் அருளானந்தன், பெர்லின், சாகர், அப்துல் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.        கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், -  குமரி மாவட்டம் மனவளக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய அரசுக்கு சொந்தமான அரியவகை மணல் ஆலை மூலம் கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட முடாத முதல் நீரோடி வரை உள்ள பகுதிகளில் சுமார் 1114 எக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கனிமங்களை பிரித்தெடுக்க அனுமதி மத்திய மாநில அரசுகள் வழங்கி உள்ளதா கூறப்படுகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் இயற்கை வளம் பாதிக்கப்படுவதோடு நோய் பாதிப்பும் அபாயம் உள்ளது.     இதனால் அரசு மணல் அறைக்கு வழங்கி உள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் நிரந்தரமாக ஆலயம் மூட வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி  31ஆம் தேதி கடல் மார்க்கமாகவும் சாலை மார்க்கமாகவும் ஒன்று திரண்டு மனவளக்குறிச்சி பகுதி அமைந்துள்ள அரியவகை மணல் ஆலையை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

Similar News