கராத்தே போட்டி பதக்கம் வென்ற மாணவனுக்கு அமைச்சர் வாழ்த்து 

கராத்தே போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற காங்கேயம் மாணவனுக்கு அமைச்சர் நேரில் வாழ்த்து 

Update: 2024-12-22 14:40 GMT
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் +84கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற காங்கேயத்தை சேர்ந்த மாணவர் ஶ்ரீ ராம் ரத்தினத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் காங்கேயம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கே.சிவானந்தன் ஆகியோர் சிவன்மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உடன் காங்கேயம் தெற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஈ.ஆனந்,ஒன்றிய இளைஞரணி சிலம்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News