மத்திய பாஜக அரசை கண்டித்து ராசிபுரத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்..
மத்திய பாஜக அரசை கண்டித்து ராசிபுரத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்..;
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்துவிட்டு,மத்திய பாஜக அரசு வளர்ந்த பாரத ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி அளிப்பு சட்டம் என்ற புதிய பெயரில் ஒரு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது. இதற்கு தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் மத்திய அரசு கண்டித்து தமிழக முழுவதும் திமுக கூட்டணி கட்சி சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெறும் என திமுக அறிவித்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீர்மானகுழு துணைத்தலைவர் பார் இளங்கோவன், தலைமை வகித்தார். ராசிபுரம் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் கே.பி.ஜெகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாவட்ட செயலாளர்.மும்பை அர்ஜுனன், முன்னிலை வகித்தார். மேலும் ஆதி தமிழர் கட்சி. ராவணன், தமிழர் பேரவை, மாவட்ட தலைவர். நீலவேங்கை, மற்றும் கூட்டணி கட்சி மாவட்டச் செயலாளர்கள், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், பாஜகவிற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்தும் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...