தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் 'சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீநிவாச ராமானுஜன் மையத்தில் 20-ஆவது சர்வதேச எண் கணித மாநாடு வெள்ளிக்கிழமைதொடங்கியது. மாநாட்டை அமெரிக்க புளோரிடா பல்கலைக்கழகப்பேராசிரியர் கிருஷ்ணசாமி அவ்லாடி, நிகழாண்டுக்கான சாஸ்த்ரா ராமானுஜன் முதல் விருது பெறும் ஜார்ஜியா தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் மஅலெக்சாண்டர் டண், தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் புலத் தலைவர் கே. உமா மகேஸ்வரி கும்பகோணம் புலத் தலைவர் ராமசாமி,கணிதத் துறைப் பேராசிரியர் நரசிம்மன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்தமாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரியா, இந்தியாவின் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவன பேராசிரியர்கள் பங்கேற்று தங்கள் எண்ணியல் கோட்பாடு தொடர்புள்ள ஆராய்ச்சி படைப்புகள் குறித்து விவாதித்தனர். நிறைவு நாளான இன்று அலெக்சாண்டர் டண்ணுக்கு 'சாஸ்த்ரா' ராமானுஜன் விருதை அமெரிக்காவைச் சேர்ந்த சுவெக்ட்டிட் பல்கலைக்கழகப் பேராசிரியர் நளினி ரவிஷங்கர் வழங்கினார்.