பழங்காநத்தம் பகுதிகளில் நாளை மின் தடை.
மதுரை பழங்காநத்தம் பகுதிகளில் நாளை (டிச.23)மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை நகர் பழங்காநத்தம் துணை மின்நிலையம் உயரழுத்த மின் பாதையில் நாளை (டிச.23) (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவள் ளுவர் நகர் முழுவதும், ஆர்.சி. தெரு ஒரு பகுதி, டி.பி.கே.ரோடு, சரவணா ஸ்டோர் முதல் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வரை, யோகியார் நகர் பகுதி, தண்டல்காரன்பட்டி ஒருபகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது