பெரியார் நகர் முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய ஆறு பேர் கைது. ரூபாய் 10,420 பறிமுதல்.

பெரியார் நகர் முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய ஆறு பேர் கைது. ரூபாய் 10,420 பறிமுதல்.

Update: 2024-12-22 12:34 GMT
பெரியார் நகர் முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய ஆறு பேர் கைது. ரூபாய் 10,420 பறிமுதல். கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிசம்பர் 21ஆம் தேதி மதியம் 3 மணி அளவில்,பெரியார் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள மொக்கி பாளையத்தார் என்பவர் வீட்டில் உள்ள முள்தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பெரியார் நகரை சேர்ந்த சுரேஷ், ரமேஷ், செல்வராஜ், கிருஷ்ணன், ராமலிங்கம், சுப்பன் ஆகிய 6- பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 10,420-யும் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க.பரமத்தி காவல்துறையினர்.

Similar News