ராமநாதபுரம் சபரிமலைக்கு நெய்யபிஷேகம் கொண்டு சென்ற பக்தர்கள்
ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாக அபிஷேக நெய் கொண்டு சென்ற பக்தர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் 26-12-2024 அன்று நடைபெற உள்ள மண்டல பூஜை மகா அபிஷேகத்திற்கு, பல வருடங்களாக இராமநாதபுரத்தில் இருந்து வேண்டுதல்களுடன் விரதம் இருந்து பாதயாத்திரையாக ஶ்ரீஐயப்ப பஜனைப் பாடல்கள் பாடி, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிஷேகத்திற்கு நெய் கொண்டு வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை இராமநாதபுரம் ஶ்ரீ மல்லம்மாள் காளியம்மன் ஆலயத்திலிருந்து ஆன்மீகப் பெருமக்கள் பாதயாத்திரையாக அபிஷேக நெய் கொண்டு வரும் இந்த நிகழ்வில் ஆன்மீகப் பெருமக்கள் கலந்து கொண்டனர் *சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி யாத்திரை மேற்கொண்டனர் வருட வருடம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாக ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஐயப்பன் ஆலயத்தில் நேற்றி கடன் செலுத்தினர்