பாலவிடுதியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
பாலவிடுதியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.;
பாலவிடுதியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பாலவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், மாவட்ட பிரதிநிதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணாக்கர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி +1,+2 பயிலும் மாணவ- மாணவியர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மிதிவண்டிகளை பெற்றுக் கொண்ட மாணாக்கர்கள் தமிழக அரசுக்கும் எம் எல் ஏ சிவகாமசுந்தரிக்கும் நன்றி தெரிவித்தனர்.