இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு.
திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாடு பட்டதாரி, முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது.... இக்கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டது. இது குறித்து தமிழக முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வேன். நல்ல முடிவை அரசு எடுத்து தீர்வு காணும் என நம்பிக்கை உள்ளது. ஒன்றிய அரசு மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தரவில்லை. இதனால் மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட வேண்டிய சூழல் உள்ளது. தொடர்ந்து தமிழகத்தை ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது. திமுக அரசு குறித்து அநாகரிகமாக பேசுவது அன்பு ராமதாஸ் வழக்கமாகிவிட்டது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. வேண்டும் என்றே ஒருத்தர் குறை சொல்வதை ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்சனைகள் இருந்து வருகிறது. இருப்பினும் அது குறித்து நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவிலிருந்து மருத்துவ கழிவு கொட்டப்பட்டு வரும் நிகழ்வு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டிய நிகழ்வு, மிகுந்த கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை போன்றது. அதேபோன்று மறைமுகமாக குலக்கல்வி திணிப்பதற்கு இன்றைய பிஜேபி அரசு முயற்சி செய்கிறது. ஜிஎஸ்டி வரி மூலமாக ஒன்றிய அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. முறையற்ற வகையில் மக்களிடமிருந்து எவ்வளவு வரி சுரண்ட முடியுமோ அவ்வளவு வரி சுரண்டப்பட்டு வருகிறது. அதேபோல் அதானி போன்றோருக்கு பெருமளவில் கடன் வழங்கப்பட்டு, அவை வாரா கடனில் வைக்கப்படுகிறது. அதிலும் அவர்களுக்கு வரி சலுகை வழங்கப்படுகிறது. வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது கோவில் மனையில் குடியிருப்போரின் கோரிக்கையான சதுர அடி வாடகை ரத்து செய்து பகுதி வரியை செலுத்துவதற்கான கோரிக்கை பேசப்படும் என்றார். இதில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட தலைவர் முத்துவேல், மாநில பொருளாளர் துரைராஜ், திருவாரூர் ஒன்றிய குழுத்தலைவர் தேவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.