கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி பொறுப்பேற்றுக் கொண்டார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2024-10-06 07:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி பொறுப்பேற்றுக் கொண்டார். கரூர் மாவட்டம், காந்திகிராம பகுதியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கல்லூரி முதல்வர் நியமிக்கப்படாமல் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நியமிக்கப்படாமல், காலியாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை நியமித்து ஆணை பிறப்பித்தது. அப்போது கரூர் மாவட்டத்திற்கு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்த லோகநாயகியை கரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லோகநாயகி இன்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அலுவலர்கள் லோகநாயகியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் லோகநாயகி நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரது பணிகளை இன்று முதல் துவக்கினார்.

Similar News