கோவை: சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு !

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Update: 2024-12-22 01:47 GMT
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 116 காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கடந்த மாதத்தில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களைத் தடுத்து நிறுத்தி, குற்றவாளிகளை கைது செய்ததற்காக காவல் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை பலர் பாராட்டப்பட்டனர். குறிப்பாக, சூலூர் காவல் நிலையம் சிறப்பான பணியை செய்ததற்காக காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரைக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பேசிய காவல் கண்காணிப்பாளர், போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவல் துறையினருக்கும் அறிவுறுத்தினார்.

Similar News