சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோரிமேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டு இருந்த சங்கர் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.