ஊத்துமலையில் மருத்துவ முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
மருத்துவ முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலையில், நெட்டூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்றத் தொகுதி பழனி நாடார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஊத்துமலை பரமசிவன், தொழிலதிபர் தங்கதுரை, ஊத்துமலை பஞ். தலைவர் (பொறுப்பு) பிச்சம்மாள் முத்தரசு உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.