கோவை: மேம்பாலப் பணி: போக்குவரத்து மாற்றம்!

துடியலூர் - கோவில்பாளையம் சாலையில் மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

Update: 2024-12-22 14:15 GMT
கோவை, துடியலூர் NGGO காலனியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் சாலையில் அமைக்கப்படும் உயர்மட்ட மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நாளை (23.12.2024) தொடங்க உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்தப் பணிகளின் காரணமாக, துடியலூர் NGGO காலனி மற்றும் கோவில்பாளையம் இடையே உள்ள சாலை இரண்டு திசைகளிலும் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்படும். இதனால், இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். இலகுரக வாகனங்கள்: துடியலூர் பஸ் நிறுத்தம், வெள்ளக்கிணர், அத்திப்பாளையம் வழியாக கோவில்பாளையம் செல்லலாம். கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் செல்பவர்கள் அத்திப்பாளையம், கணபதி நகர் வழியாக வெள்ளக்கிணர் செல்லலாம். கனரக வாகனங்கள்: துடியலூர் பஸ் நிறுத்தம், வெள்ளக்கிணர், சரவணம்பட்டி ரோடு, சுண்ணாம்புக்காலவாய் வழியாக கோவில்பாளையம் செல்லலாம். கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் செல்பவர்கள் அத்திப்பாளையம், கண்ணாம்புக்காலவாய், சரவணம்பட்டி ரோடு வழியாக வெள்ளக்கிணர் செல்லலாம். இந்த மாற்றங்கள் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிறிது சிரமத்திற்கு உள்ளாக நேரிடலாம். எனவே, அனைவரும் மாற்று வழிகளை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பு: மேம்பாலப் பணிகள் நடைபெறும் காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வேண்டும்.

Similar News