ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் ரூ.2,152 கோடியை விடுவிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஒருங்​கிணைந்த கல்வித் திட்​டத்​தின் ரூ.2,152 கோடி நிதியை தமிழகத்​துக்கு உடனடியாக விடுவிக்க வேண்​டும் என்று மத்திய பட்ஜெட் முன்னோட்ட கூட்​டத்​தில், தமிழக நிதி​யமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்​தி​யுள்​ளார்.

Update: 2024-12-22 09:43 GMT
மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான முன்னோட்டக் கூட்​டம், ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்​சால்​மரில் நடைபெற்​றது. மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் தலைமையிலான இக்கூட்​டத்​தில், தமிழகம் சார்​பில் நிதி​யமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்​துறை செயலர் உதயச்​சந்​திரன் ஆகியோர் பங்கேற்​றனர். கூட்​டத்​தில், தமிழகம் சார்​பில் வலியுறுத்​தப்​பட்ட கோரிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப்​பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்​காகத் தமிழக அரசு ரூ.26,490 கோடி செலவிட்​டுள்ள​தால், மாநிலத்​தில் இதர வளர்ச்​சித் திட்​டங்களை மேற்​கொள்ள ஏதுவாக, நடப்​பாண்​டில் ரூ.10 ஆயிரம் கோடி மற்றும் அடுத்த ஆண்டு ரூ.16 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்​டும் என வலியுறுத்​தினேன். ஆசிரியர்​களுக்கான ஊதியம் - கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்​படுத்​துதல் உள்ளிட்ட பள்ளிச் செயல்​பாடுகளை முடக்​கும் வகையில், ஒருங்​கிணைந்த கல்வித் திட்​டத்​தின் ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்​காமல் நிபந்​தனைகளை ஏற்க வற்புறுத்தி வரும் மத்திய அரசு, 44 லட்சம் மாணவர்​கள், 2.2 லட்சம் ஆசிரியர்​கள், 21,276 பணியாளர்​களின் எதிர்​காலத்​தைக் கருத்​தில்​கொண்டு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்​டும். மேலும், மத்திய அரசின் 2025-ம் ஆண்டு பட்ஜெட்​டில், தமிழகத்​தில் புதிய ரயில் திட்​டங்​களுக்கான அனுமதி மற்றும் தேசிய நெடுஞ்​சாலை திட்​டங்களை அதிகரிக்க வேண்​டும் என்று கேட்டுக் கொண்​டேன். வானிலை நிகழ்வு​களின் தீவிரத்தன்மை காரணமாக தமிழகம் தொடர் பேரிடர் சவால்​களைச் சந்தித்து வரும் நிலை​யில், மக்களின் உயிர், வாழ்​வா​தா​ரம், உட்கட்​டமைப்பு​களுக்கு பெரும் சேதம் உண்டாகி வருகிறது. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதி போது​மானதாக இல்லை. குறிப்​பாக, ஃபெஞ்சல் புயல் பாதிப்பு​களைக் கருத்​தில்​கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நி​தியி​லிருந்து ரூ.6,675 கோடியை ​விடுவிக்​க​வும் மத்​திய அரசை வலி​யுறுத்​தினேன் என தெரி​வித்​துள்​ளார்​.

Similar News