அலங்காநல்லூர் அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்
மதுரை அலங்காநல்லூர் அருகே ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் எர்ரம்பட்டி மற்றும் அய்யூர் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புஉறுதி திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் 2023 .24 நிதி ஆண்டிற்கான சமூக தணிக்கை இன்று (டிச.22) நடைபெற்றது தமிழ்நாடு சமூக தணிக்கை அலங்காநல்லூர் வட்டார வள அலுவலர் சாரா மற்றும் கிராமவள அலுவலர்கள் சமூக தணிக்கை அறிக்கை வாசித்தனர் சிறப்பு கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.