அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

நெல்லை நீதி​மன்ற வளாகத்​தில் இளைஞர் படுகொலை செய்​யப்​பட்ட சம்பவம் எதிரொலியாக அனைத்து மாவட்ட நீதி​மன்​றங்​களுக்​கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாது​காப்பு வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்ற நீதிப​திகள் உத்தர​விட்​டுள்​ளனர்.

Update: 2024-12-22 09:29 GMT
நெல்லை நீதி​மன்ற வளாகத்​தில் வழக்கு விசா​ரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞரை நீதி​மன்ற வாயி​லில் வைத்து 7 பேர் கொண்ட கும்பல் வெட்​டிப்​படு​கொலை செய்​தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதி​மன்றநீதிப​திகள் எஸ்.எம்​.சுப்​ரமணி​யம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்​வந்து வழக்காக எடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தர​விட்​டிருந்​தனர். அதன்படி இந்த வழக்கு நேற்று மீண்​டும் இதே அமர்​வில் விசா​ரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்​பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் மற்றும் மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் சீலிட்ட அறிக்கையை தாக்கல் செய்​தனர். அப்போது நீதிப​தி​கள் கூறியதாவது: போலீ​ஸார் சிறப்பு உதவி ஆய்வாளரான உய்ய​காட்டான் என்பவர் துணிச்​சலாக கொலை​யாளி​களில் ஒருவரை வழக்​கறிஞர்​களின் துணை​யுடன் விரட்​டிச் சென்று பிடித்​துள்ளார். அவரை பாராட்டு​கிறோம். அவருக்கு உரிய வெகுமதி மற்றும் நற்சான்​றிதழை அரசு வழங்​கு​வதுடன் அவருடைய பணிப்​ப​திவேட்​டிலும் பதிவு செய்ய வேண்​டும். அதேநேரம் மற்ற போலீ​ஸாரும், அதிகாரி​களும் என்ன செய்து கொண்​டிருந்​தனர்? இந்த கொலை சம்பவம் எங்கு நடந்​துள்ளது என்பது தான் கவலை கொள்ள வைக்கிறது. நீதி​மன்ற வளாகத்​துக்​குள்​ளேயே ஒருவரை விரட்டிகொலை செய்ய முடிகிறது என்றால் சாட்சிகள் எப்படி துணிச்​சலாக சாட்​சியம் அளிக்க முன்​வரு​வர். காவல்​துறை​யினர் பணி நேரத்​தி​லும்கூட செல்​போனில் தான் அதிகமாக மூழ்கி கிடக்​கின்​றனர். நாங்கள் நீதி​மன்​றத்​துக்கு வரும் வழியில் போக்கு​வரத்து போலீ​ஸார் என்ன செய்து கொண்​டிருக்​கின்றனர் என்பதை கண்கூட்டாக பார்க்​கிறோம். இந்த கொலை சம்பவம் நடந்த​போது பாது​காப்பு பணியில் இருந்து தவறிழைத்த போலீ​ஸார் மற்றும் அதிகாரிகள் மீது நெல்லை காவல் ஆணையர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். நிரந்​தரமாக பாது​காப்பு ஏற்பாடுகளை செய்​யும் வரை இடைக்​காலமாக தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து ​மாவட்ட நீ​தி​மன்​றங்​களுக்​கும் தேவையான ஆ​யுதம் தாங்கிய ​போலீ​ஸாரை பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்த வேண்​டும் என உத்​தர​விட்டு அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜன.7-ம் தே​திக்கு தள்ளி வைத்​துள்​ளனர்​.

Similar News