விருத்தாசலத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள் வாக்கு அருள்வோர் பேரவை மாவட்ட பொது குழு கூட்டம்
24ஆம் பட்டத்து குருமகா சன்னிதானம் சீர்வளர் சீர் ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரியார் பங்கேற்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைப்பாளர் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார் .அமைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். அமைப்பாளர் வெங்கட்ராமன் ஜி முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் ஜி கலந்துகொண்டு தீர்மானங்களை வாசித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக திருக்கைலாய பரம்பரை மெய்கண்ட சந்தான மரபு திருவண்ணாமலை துறையூர் திருமுதுகுன்றத்து வீரசைவ ஆதீனம் 24ஆம் பட்டத்து குருமகா சன்னிதானம் சீர்வளர் சீர் ரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசி மற்றும் வாழ்த்துரை வழங்கினார். இதில் கிராம பூசாரி அனைவருக்கும் எவ்வித நிபந்தனை இன்றி மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்க வேண்டும். 60 வயது நிறைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத 5000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஓய்வவூதியும் பெரும் பூசாரிகள் மறைவிற்குப் பின் அவரது மனைவிக்கு ஓய்வுஊதியதொகை வழங்க வேண்டும். அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணமில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் தமிழக அரசு சிதலமைடைந்த கிராம கோவில்களை புணரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட ரூபாய் 5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் தமிழகத்தில் முடங்கி கிடக்கும் பூசாரி நல வாரியத்தை செம்மை படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் இம்மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் அருண் பிரசாதம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.