கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அருண்மொழிதேவன் எம்எல்ஏ பங்கேற்பு
விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட கழக அவை தலைவர் தங்கராசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் முருகுமணி, அருள் அழகன், சக்திவேல், மண்டல செயலாளர் அருண், மாவட்ட பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், அய்யாசாமி, மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார் .மாவட்டத் துணைச் செயலாளர் இன்ஜினியர் ரவிச்சந்திரன் தீர்மானங்களை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அருண்மொழி தேவன் எம்எல்ஏ கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் தம்பித்துரை, பச்சமுத்து, முனுசாமி, சின்ன ரகுராமன், பேரூர் செயலாளர் பாலமுருகன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் கனகசிகாமணி, புஷ்பாவேங்கட வேணு, வளர்மதி ராஜசேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தை இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாகவும், சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் முதல் மாநிலமாகவும், போதைப்பொருள் புழக்கத்தில் முதல் மாநிலமாகவும் மாற்றி மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சி நடத்தி வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலினை வன்மையாக கண்டிப்பது, கடுமையான விலைவாசி உயர்வு, அனைத்து வரிகளும் உயர்வு, மின்சார கட்டண உயர்வு என பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் திமுக அரசை வன்மையாக கண்டிப்பது, கடலூர் மாவட்டத்தையும் அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் சௌந்தர சோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றில் ரூபாய் 11 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட பாலத்தை இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும், கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு செல்ல காரணமான என்எல்சி நிறுவனத்தால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் விவசாயிகளையும் விவசாய தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் என்எல்சி நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ள தமிழக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் விரைவில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.