பல கோடி வாடகை பாக்கி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் எஸ்பியிடம் பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் மனு!

ரூ.2.5 கோடி வரை சிமெண்ட் லோடு ஏற்றி வாடகை தராமல் நிலுவையில் இருந்து வந்தது இது தொடர்பாக பலமுறை wiz track நிறுவனத்தில் முறையிட்டும் சரியான பதில் இல்லாததால், பாதிக்கப்பட்ட நான்கு லாரி உரிமையாளர்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Update: 2024-10-07 10:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளரிடம் 2.5.கோடி வாடகை பாக்கி தராமல் இழுத்தடித்த வெளிநாட்டு லாரி போக்குவரத்து நிறுவனம் மீது பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மணிவேல், சதீஷ்குமார், புகழ், அமல்ராஜ் ஆகியோர் சென்னையை தனி இடமாகக் கொண்டு இயங்கும் வெளிநாட்டு லாரி போக்குவரத்து நிறுவனமான Wiz Track நிறுவனம்
கடந்த ஓராண்டுக்கு முன்னாள் இந்த 4 பேரிடம் ரூ 2.5 கோடி வரை சிமெண்ட் லோடு ஏற்றி வாடகை தராமல் நிலுவையில் இருந்து வந்தது இது தொடர்பாக பலமுறை wiz track நிறுவனத்தில் முறையிட்டும் சரியான பதில் இல்லாததால், பாதிக்கப்பட்ட நான்கு லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யுவராஜ் தலைமையில் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அருள் முன்னிலையில் இருபதுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வாடகை பாக்கி தராத நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, நிலுவை வாடகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர். இதேபோன்று தமிழகத்தில் பல இடங்களில் வெளிநாட்டு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், ஏற்றுமதி நடத்தி வரும் நிறுவனங்கள் பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கிகளை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் இனிமேல் இதுபோல் நடக்காமல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Similar News