ராமநாதபுரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஹாஸ்டல் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ராமநாதபுரம் அருகே அரசு சட்டக் கல்லூரி சுமார் 80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் ஆண் பெண் என 900 க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரி திறக்கப்பட்ட நாளிலிருந்து குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் வசதி, ஹாஸ்டல் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இந்த அரசு சட்டக் கல்லூரியில் இல்லை என மாணவர்கள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைஇதனால் மனமுடைந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தெரிவிக்கையில், அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என கூறி தான் கல்லூரி திறக்கப்பட்டது.. நகரத்துக்கு வெகு தொலைவில் இருக்கக்கூடிய இந்த கல்லூரியில் பேருந்து வசதி மூன்று முறை மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு அவசர சிகிச்சைக்கு கூட முதலுதவி செய்வதற்கு இங்கு மருத்துவ வசதி இல்லை. முக்கியமாக குடிநீர் வசதி இங்கு இல்லவே இல்லை. பெண்கள் தங்குவதற்கு ஹாஸ்டல் இருந்தும் எந்த ஒரு வசதியும் இல்லாததால் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் ராமநாதபுரத்தில் தனியார் விடுதிகளில் தங்கி பயிலக்கூடிய ஒரு அவல நிலை உள்ளது. விளையாட்டு மைதானங்கள் முற்றிலுமாக இல்லை. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய பதில் அளித்தால் தான் நாங்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களை போராட்ட குணத்திற்கு தள்ள வேண்டாம் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.