பிஜேபி நகர தலைவர் பி.வேலு அறிக்கை: நிர்வாகிகளுக்கு அழைப்பு...

பிஜேபி நகர தலைவர் பி.வேலு அறிக்கை: நிர்வாகிகளுக்கு அழைப்பு...;

Update: 2026-02-06 16:04 GMT
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் நகர தலைவர் பி.வேலு, அவர்கள் வணக்கம் தெரிவித்து அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்... 2026 சட்டமன்ற தேர்தல்அறிக்கையை சிறந்த முறையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி உருவாக்க உறுதுணையாக அனைத்து தரப்பு மக்களிடமிருந்து கருத்து கேட்கும் வகையில் மக்களுக்காக மக்களிடமிருந்து என்ற கருத்து கேட்கும் இயக்கமானது நமது இராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட தலைவர் KP சரவணன் அவர்கள் தலைமையில் , மாவட்ட பாஜக பொதுசெயலாளர் திருமதி சுகன்யா, துணைத் தலைவர்கள் சேதுராமன், வழக்கறிஞர் RT இளங்கோ, அதிமுக நகர செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் பாலசுப்பரமணியம் , சட்டமன்ற பாஜக இணை அமைப்பாளர் பட்டியல் அணி மாவட்ட தலைவர் தமிழரசு ஆகியோர் முன்னிலையில், இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாநில துணைத்தலைவர் சேலம் பெருங் கோட்டபொறுப்பாளர் டாக்டர் கே.பி இராமலிங்கம் முன்னாள் எம்பி அவர்கள் தொடங்கி வைக்கிறார். பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் , சட்டபேரவை முன்னாள் துணைதலைவர் ‘வி.பி. துரைசாமி , அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளனர், இதில் இராசிபுரம் பாஜக நிர்வாகிகள், நகர அதிமுக நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் , இந்திய ஜனநாயக கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி , புதிய நீதிகட்சி ஆகிய கட்சிகளின் மாநில, மாவட்ட, நகர, அணி, பிரிவு அணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொண்டு அழைப்பு விடுத்துள்ளார்..

Similar News