மனிதநேய வார நிறைவு விழாவில் 43 பயனாளிகளுக்கு ரூ.19.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் மா. மதிவேந்தன்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மனிதநேய வார நிறைவு விழாவில் 43 பயனாளிகளுக்கு ரூ.19.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.;

Update: 2026-02-06 15:19 GMT
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சரவண மஹாலில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன் தலைமையில் 43 பயனாளிகளுக்கு ரூ.19.67 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 138 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினை வழங்கினார். தமிழ்நாடு மதலமைச்சர் ஆதிதிராவிடர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் சம அந்தஸ்துடன் ஒற்றுமையாக வாழ்வதை அனைத்து தரப்பினருக்கும் எடுத்துரைக்கும் விதமாக மனிதநேய வாரவிழா நடத்தப்படுகிறது. இவ்விழாவானது பல்வேறு நிகழ்வுகளாக 24.01.2026 முதல் 30.01.2026 வரை நடத்தப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களைக் கொண்டு நாட்டியம், நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்ள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நிறைவு விழாவான இன்றைய தினம் பரிசுகள் வழங்கப்படுகிறது. மனிதநேயம் என்றால் என்ன என்பதை நீங்கள் மனதளவில் புரிந்து கொண்டாலே, அது தான் இத்துறையின் வெற்றியாகும். மனிதநேயம் என்பது பிறரை கன்னியமாக நடத்துதல் மற்றும் அவர்களின் உரிமை, சுதந்திரத்தை மதிப்பதாகும். பள்ளி மற்றும் கல்லூரியை பயின்று ஒரு சமுதாயத்திற்குள் வரும் பொழுது பல்வேறு வேறுபாடுகளை நாம் உணர்கிறோம். வேறுபாடுகள் நம்மிடையே எழக்கூடாது. ஆதிதிராவிடர் நலத்துறையில் மாணவ, மாணவியர்களுக்கு விடுதிகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கட்டணம், சிறப்பு கல்வி உதவித்தொகை, அயல்நாடு சென்று உயர்கல்வி பயில உதவித்தொகை, முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத்தொகை திட்டம், விலையில்லா மிதிவண்டிகள், தையல் இயந்திரம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பட்டியலின, ஏழை, எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி மாணவச் செல்வங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இன்றைய தினம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார். இவ்விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.1,67,250 மதிப்பில் தையல் இயந்திரம், 18 பயனாளிகளுக்கு ரூ.18.00 இட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா என மொத்தம் 43 பயனாளிகளுக்கு ரூ.19.67 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மற்றும் கல்லூரி /பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு கடந்த 24.01.2026 முதல் 30.01.2026 வரை பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, நடனம் மற்றும் நாடகம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளிகளில் 89, விடுகளில் 49 என 138 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, மனித நேய வார நிறைவு விழாவில் தீண்டாமையை ஒழிப்பதற்காகவம் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணருந்தினார். இந்நிகழ்ச்சியில், இராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், துணை காவல் கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு) செந்தில்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கே.ஏ.சுரேஷ்குமார், இராசிபுரம் வட்டாட்சியர் சசிகுமார், தனி வட்டாட்சியர் கதிர்வேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News