ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் ஸ்ரீ ஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்...
ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் ஸ்ரீ ஐயப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் ஸ்ரீ ராகவேந்திரா நகரில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது.விழா கடந்த பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி பூஜை ஆனது சபரிமலை சன்னதியின் அஸ்தான சபாதி சதாசிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேதமந்திரங்கள் மூலமாக பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இறுதியாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரைக் கொண்டு கோபுர கலசங்களுக்கு நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.அப்போது பக்தர்கள் சரண கோஷங்கள் எழுப்பி ஐயப்பனை வழிபட்டனர்.. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கோவில் சன்னதி கருவறையினது, சபரிமலை ஐயப்பன் சன்னதி அளவில் வடிவமைக்கப்பட்டதாகவும், மேலும் 148 நெல் மணி உயரம் ஐயப்பன் சுவாமி உள்ளது குறிப்பிடத்தக்கது...