100 நாட்களை கடந்த ஒன்றிய பாஜக அரசு 150 நாட்களை கடப்பதற்கு முன்பாகவே வீழ்ந்து விடுவார்கள் என இளங்கோவன் பேச்சு!

100 நாட்களை கடந்த ஒன்றிய பாஜக அரசு 150 நாட்களை கடப்பதற்கு முன்பாகவே வீழ்ந்து விடுவார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் EVKS. இளங்கோவன் பேட்டி!

Update: 2024-10-07 11:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
100 நாட்களைக் கடந்த ஒன்றிய பாஜக அரசு 150 நாட்களை கடப்பதற்கு முன்பாகவே வீழ்ந்து விடுவார்கள் - திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்.EVKS. இளங்கோவன் பேட்டி! தேசத்தந்தை மகாத்மா காந்தி ஜெயந்தி , பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் ,  செவாலியே சிவாஜி கணேசன் 97வது பிறந்தநாள் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கலை பிரிவு சார்பாக வெள்ளியங்காடு பகுதியில் காங்கிரஸ் கமிட்டியின் கலை பிரிவின் மாநில துணைத்தலைவர். கலாராணி தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான EVKS. இளங்கோவன் கலந்து கொண்டு கலைப்பிரிவு நிர்வாகிகளுக்கு கேடயம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். என்னுடைய அரசியல் வாழ்விற்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் மூன்று பேர் அவர்கள்  சிவாஜி கணேசன் , அன்னை சோனியா காந்தி 3வதாக தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என பேசினார். வரியாக கொடுத்த பணத்தை நிவாரணமாக கேட்டால் அவர்கள் வீட்டு பணத்தை கேட்பது போல திருப்பிக் கொடுக்க மறுக்கிறார்கள். இது வீட்டிற்கு போக வேண்டிய காலமோ அல்லது கம்பிகளுக்கு பின்னால் செல்ல வேண்டிய காலமோ என தெரியவில்லை என பாஜக அரசை விமர்சித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர் , காந்தியை கொன்ற கோட்சேவின் உருவப் படத்தை வைத்து பூஜை செய்கின்ற பாரதிய ஜனதா கட்சிக்கும் , குறிப்பாக இங்கே தற்காலிக பதவியில் உள்ள காலாவதியான ராஜா , காந்தியை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் தகுதியும் இல்லை. பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய தலைவராக இருந்த போது பாஜக , ஆர் எஸ் எஸ் காமராஜரை உயிரோடு எரிக்க முயற்சித்தவர்கள். அப்படி இருக்கிறவர்கள் காமராஜரை பற்றி பேசுவதற்கோ அவரது நினைவு நாளை கொண்டாடுகிறோம் என்று சொல்வதற்கு தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட யாருக்கும் தகுதியும் , அருகதையும் கிடையாது. காந்தியின் பெயரால் காமராஜரின் பெயரால் பிழைப்பு நடத்த வேண்டும் என்று நினைக்கின்ற அவர்களை மக்கள் காந்தியையும் காமராஜரையும் எதிர்த்தவர்கள் என்றுதான் அடையாளம் கண்டு இருக்கிறார்கள். அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்பது கருத்துக்கணிப்பு மட்டுமல்ல , அதுதான் உண்மையும் கூட. மிகப் பெரிய அளவில் அரியானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்பதை பாஜக கட்சியைச் சார்ந்தவர்கள் ஒப்புக்கொண்டு காணாமல் போய்க் போய்க்கொண்டுள்ளார்கள். காஷ்மீரிலும் வேட்பாளர்களைளே கிடைக்காத பாரதிய ஜனதா கட்சிக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்குமே தவிர அவர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது அங்கேயும் காங்கிரஸ் முதல்வர்தான்.  தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி மூலமாக ஆயிரம் ஆயிரம் கோடிகளை பெற்றுக் கொண்டு தமிழகத்திற்கு வெள்ளம் வந்தபோதும் ,  மழை பெய்த போதும் , நிவாரணத் தொகைகளை அளிக்காமல் நம்மை வாட்டுகின்றனர். இந்த பாஜக அரசுக்கு மனித தன்மை இருக்கிறதா என கேட்க தோன்றுகின்றது. 100 நாட்களைத் தாண்டிய பாஜக அரசு 150 நாட்களை தாண்ட முடியாது. அதற்கு முன்பாகவே அவர்கள் வீழ்ந்து விடுவார்கள் என பேட்டியளித்தார். இந்நிகழ்வில் காங்கிரஸ் கலை பிரிவின் மாநில தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளருமான சந்திரசேகரன் , மாநில செயலாளர் டிடிகே சித்திக் , மாநில செயலாளர் முத்து ராமலிங்கம் , காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் , கலைப்பிரிவு மாநகர மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Similar News