அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து யூனியன் அலுவலகம் முற்றுகை
திண்டுக்கல் நத்தம்;
நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி மனப்புளிகாடு கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் ஆடு மாடுகளுடன் ஊர்வலமாக வந்து நத்தம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதில் தமிழர் தேசம் கட்சியின் மாநில செயலாளர் பூமி அம்பலம், மாவட்ட செயலாளர் பிரபு அம்பலம், மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட இணை செயலாளர்கள் பூவன், ஆட்டோ பூமி, கொரசினம்பட்டி வெள்ளிமலை, சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.