பஸ் ஓனர் மீது தாக்குதல்: அரசு மருத்துவமனையில் டூரிஸ்ட் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கூடியதால் பரபரப்பு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு தனியார் டூரிஸ்ட் பஸ் ஒன்று நேற்று காலை புறப்பட்டது. இந்த பஸ் இருக்கு கோயிலுக்கு சென்றவர்கள் 2000 ரூபாய் முன் பணம் கொடுத்துள்ளனர். மேலும் 10,000 ரூபாய்க்கு டீசல் நிரப்பி உள்ளனர். இந்த பஸ்சுக்கான பேசிய முழு வாடகை தொகையை வழங்கும் படி பஸ் உரிமையாளர் ஒடச்சல்பட்டியை சேர்ந்த அன்பழகன் கேட்டுள்ளார். இது தொடர்பாக அன்பழகனுக்கும் பஸ்ஸில் வந்த பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் காரிமங்கலத்தை சேர்ந்த சில முக்கிய பெரம்பல்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காரில் வந்த அவர்கள் கொல்லாபுரி மாரியம்மன் கோவில் அருகே நின்றிருந்த பஸ் உரிமையாளர் அன்பழகன் இடம் பேசியபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது கைகளப்பாக மாறியது. இதில் அன்பழகன் தாக்கப்பட்டதில் அவருக்கு முகம் காயப்பட்டுள்ளது பல்லு உடைந்தது. இதை அடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்வி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இது குறித்து தகவல் அறிந்த டூரிஸ்ட் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் அன்பழகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதை அடுத்து இங்கு வந்த கிருஷ்ணாபுரம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.