காரையூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காரையூர் போலீசார் இன்று அப்பகுதியில் ரோந்து செய்த போது லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த செல்வம், பிச்சன் (எ) குமார் ஆகிய இருவரை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன், லாப்டேப், மோட்டார் சைக்கிள், ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.