உடுமலை ஆர் கே ஆர் கிரிக்ஸ் மேல்நிலை பள்ளியில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

குழந்தைகள் பங்கேற்பு

Update: 2024-10-11 09:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர் கே ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை மற்றும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது விழாவை முன்னிட்டு கேஜி பிரிவு மழலையர்கள் சரஸ்வதி அந்தாதி மற்றும் நவராத்திரி பாடல்களை பாடினர் மேலும் சரஸ்வதி முருகன் சிவன் கண்ணன் ராதை போன்ற வேடம் அணிந்து இருந்தனர்.இந்த விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் பெருமக்களை ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் .ஆர். கே. ராமசாமி ,செயலாளர் கார்த்திக் குமார் ,மற்றும் பள்ளி முதல்வர் பாலா ஆகியோர் பாராட்டு வாழ்த்து தெரிவித்தனர்

Similar News